புது டெல்லி:-காயம் காரணமாக ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஷிகார் தவானுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் ரகானே தொடக்க வீரராக விளையாடுவார் என்று கேப்டன் டோனி தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
தொடக்க வீரராக விளையாடுவதற்கு ரகானே மிகவும் பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டியில் அவர் எந்தவிதமான ஆடுகளத்திலும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி இருக்கிறார். தொடக்க வீரருக்கு உரிய பொறுப்பு, கடமை அவரிடம் இருக்கிறது. இதற்காக ரோகித்சர்மா மிடில் ஆர்டருக்கு மாற்றப்படுவார் என்பதில்லை. இருவரும் தொடக்க வீரருக்கு பொருத்தமானவர்களே. சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி