செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…

பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…

பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!… post thumbnail image
பெங்களூர்:-பிளாக்மெயில் மற்றும் பணம் பறிப்பு விவகாரம் ஆகியவற்றில் கன்னட நடிகை நயன கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். சில கன்னடப் படங்களில் நடித்த நயன கிருஷ்ணாவுடன் சேர்த்து அவருடைய குழுவினர் என சொல்லப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் டாக்டர் ஒருவரைச் சந்தித்து அவருடன் நெருக்கமாகப் பழகி அதை வீடியோவில் படம் எடுத்து வைத்து, அந்த டாக்டரை மிரட்டியதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்தான் இந்த நயன கிருஷ்ணா என்கிறார்கள்.

அதன் பின் அவர் நீதிமன்றத்தை அணுகி பெயிலும் வாங்கியிருக்கிறார். ஆனால், வேறு ஒரு புதிய குற்றச்சாட்டில் அவரை போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.வீடியோவில் படமாக்கப்பட்ட காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி, அதை டிவி சேனல்களுக்கு அனுப்புவோம் என்று மிரட்டி, பல லட்சம் ரூபாயை பணமாகக் கேட்டிருக்கிறார்களாம். சமீபத்தில் வந்த புதிய புகாரை அடுத்து போலீசார் நயன கிருஷ்ணாவைக் கண்காணித்து வந்திருக்கின்றனர். அவரை விசாரணைக்காக அழைத்த போது, அவரைக் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி