சென்னை:-நடிகர் மோகன்லாலின் இணையதளத்தை யாரோ விஷமிகள் முடக்கி வைத்துள்ளார்களாம். அதோடு பாகிஸ்தான் நாட்டு கொடியையும் இணைத்துள்ளார்களாம். அதில், உங்களது இந்திய நாட்டு ராணுவம் ஏராளமான ஜம்மு-காஷ்மீர் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று குறிப்பிட்டிருப்பவர்கள். உங்களது இணையதள சர்வர் மட்டுமின்றி, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டுக்கும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்களாம்.
அதோடு, இந்த தகவல் உங்களைப்போன்ற ஒரு பிரபலத்தின் இணையதளம் மூலம் வெளியிட்டால்தான் பெருவாரியானவர்களை போய் சேரும் என்பதாலேயே இப்படி செய்தோம். ஆனபோதும், முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்களாம். இதையடுத்து கொச்சின் போலீசில் மோகன்லால் தரப்பு புகார் செய்திருப்பதை அடுத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி