சென்னை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடிகை அனுஷ்கா பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதனால் புது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதனை அனுஷ்கா ஏற்கனவே மறுத்தார். ஆனாலும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இதை மீண்டும் மறுத்து அனுஷ்கா கூறும்போது, எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். நான் தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நான் இல்லை. எனக்கு திருமணம் முடிவாகும் போது அதனை நிச்சயம் அறிவிப்பேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி