நாகார்ஜுனா, அமலா, சக்கரவர்த்தி உட்பட படத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்தப் படம் தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் வெள்ளி விழா கொண்டாடியது.நேற்று நடந்த விழாவில் நாகார்ஜுனா கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் முதலில் இருந்ததாம். நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவை வைத்து ராம்கோபால் வர்மா தயாரித்த ‘பெஜவாடா’ படம் படுதோல்வியடைந்த பிறகு நாகார்ஜுனா, ராம்கோபால் வர்மாவுடன் பேசியதே இல்லை என்கிறார்கள். இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு நேற்று நடந்த விழாவில் மனைவி அமலாவுடன் நாகார்ஜுனா கலந்து கொண்டுள்ளார்.
விழாவில் பலரும் அவர்களுடைய ‘சிவா’ பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ராம்கோபால் வர்மாவின் அப்போதைய உதவி இயக்குனரும், தற்போதைய பிரபல இயக்குனருமான கிருஷ்ண வம்சி, ‘சிவா’ படம் தெலுங்குத் திரையுலகின் ‘ஷோலே’ என்று குறிப்பிட்டுப் பேசினார். ‘சிவா’ படம் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு அடுத்த மாதம் 100 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி