சென்னை:-சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவு மீது படுகிறது. இதுவே சந்திர கிரகணம்.இன்று பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6.05 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு மிகவும் குறைவு. இது போல் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இதை பார்க்க முடியாது.
சந்திர கிரகணம் நடைபெறும்போது இரவு நேரமாக உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் இதை காணலாம்.வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் காரணமாக பூமியின் நிறம் செம்பழுப்பு நிறமாக இருக்கும். எனவே, சந்திர கிரகணத்தின் போது, நிலா சிவப்பு நிறமாக இருக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி