சென்னை:-சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், மேலும் இரண்டு தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்தது. இதுவரை 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படிப்பிடிப்புகள் ஊட்டியில் நாளை தொடங்குகிறது. விஷால், ஹன்சிகா தொடர்பான காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.
இந்நிலையில் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்த யுவன் படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக 5 இசை அமைப்பாளர்களை களம் இறக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார். 5 பேருமே புதுமுகங்கள்தான். ஹிப் ஆப் தமிழா ஆல்பம் புகழ் ஆதி ஒரு இசை அமைப்பாளர். ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ஒருவரும் இசை அமைக்கிறார். இவர்கள் தவிர இன்னும் 3 இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார் சுந்தர்.சி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி