வட இந்தியாவில் ராணுவ முகாம் உள்ள பகுதிகளில் தல 55 படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர்.அங்கே படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமாக்ஸ் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார்கள். தல 55 படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதால் ஹைதராபாத் ஷெட்யூலோடு தல 55 படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.என ட்வீட் செய்திருக்கிறார்.சில பேட்ச்வொர்க் மட்டுமே படமாக்கப்படவிருக்கிறதாம்.கௌதம் மேனன் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த மாத இறுதிக்குள் தல55 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் அனைத்தும் வெளியாகும் என தகவல் அடிபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி