கோலாலம்பூர்:-மலேசிய விமானம் கடலில் விழுந்து காணாமல் போன நிலையில், மற்றொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்நிலையில் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது. சி.பி.90.ஹெச் என்ற போர்க்கப்பல் நேற்று புலாவ் லயாங் லயாங் பவளத்தீவு நோக்கி வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றபோது திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது.
மோசமான வானிலை நிலவுவதால் ரோந்து பணியிலிருந்து திரும்ப அனுமதிக்குமாறு கடைசி அழைப்பு வந்த நிலையில்,அது காணாமல் போயுள்ளது.மலேசிய போர்க்கப்பல் ரோந்து செல்லும் பகுதி முழுவதையும் சீனா தனக்கு சொந்தம் என்று கூறி வரும் நிலையில் இந்நிகழ்வு நடந்துள்ளது. காணாமல் போன போர்கப்பலை தேடும் பணியில் 3 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அக்கப்பல் கடைசியாக புலாவ் மங்களும் என்ற இடத்திலிருந்து வடகிழக்கில் 20 மைல் தொலைவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்களும் இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி