செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!… post thumbnail image
புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை இந்தியாவில் உள்ள உள்ளூர் அழைப்புகளுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே வாட்ஸ் அப், வைபர் போன்ற உடனடி ஆப்ஸ்களால் தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது என அந்த நிறுவனங்கள் ட்ராயிடம் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் அழைப்புகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஸ்கைப் அறிவித்துள்ளது. அதேசமயம் ஸ்கைப் டு ஸ்கைப் கால் வசதியை இந்தியாவிற்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மற்ற செல்போன் அல்லது லேண்ட்லைன் நம்பரை தொடர்பு கொள்ள முடியாது என்றும் ஸ்கைப் அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி