இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸில் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கேலிச்சித்திரம் வெளியானது. அதில், ‘எலைட் ஸ்பேஸ் கிளப்’ என்று எழுதப்பட்ட ஒரு ஆடம்பர அறைக்குள் பணக்காரர்கள், இந்தியாவின் சாதனை பற்றிய பத்திரிகையை படித்துக்கொண்டிருப்பதாகவும், அப்போது, பசு மாட்டை பிடித்துக் கொண்டு ஒரு விவசாயி அந்த அறையின் கதவை தட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. அந்த விவசாயியை, ‘இந்தியா’ என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த கேலிச்சித்திரத்துக்கு வாசகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அதன் தலையங்க ஆசிரியர் ஆன்ட்ரூ ரோசன்தால் இதுபற்றி சமூக வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது: விண்வெளி ஆராய்ச்சி, பணக்கார நாடுகளின் ஏகபோக உரிமை அல்ல என்று சித்தரிப்பதே அந்த கேலிச்சித்திரத்தின் நோக்கம். இந்தியாவை இழிவுபடுத்துவது நோக்கம் அல்ல. இதற்காக யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி