சென்னை:-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 150 தீவுக்கூட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடுதான் சீஷெல்ஸ். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த சீஷெல்ஸ், இயற்கை எழில் கொஞ்சும் நாடு என்பதால் உலகிலுள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாவாசிகள் மூலம் இந்த நாட்டிற்கு பெரிய வருமானம் கிடைத்து வருகிறதாம்.
மேலும், இந்த நாட்டில் தமிழர்களும் பெருவாரியாக வசித்து வருகிறார்களாம். அதனால் இந்த ஆண்டு சீஷெல்ஸ் நாடு நடத்திய பண்பாடு கலாச்சார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இசைஞானி இளையராஜாவை அழைத்திருந்தார்களாம். அந்நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் 4 நாட்கள் நடைபெற்ற விழாவில் இளையராஜா கலந்து கொண்டாராம். அப்போது, இளையராஜாவை சீஷெல்ஸ் நாட்டின் தூதராக அந்நாட்டு அரசு நியமிப்பதாக அறிவித்ததாம். அதற்கு இளையராஜாவும் சம்மதம் சொல்லி அந்த கெளரவத்தை ஏற்றுக்கொண்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி