இந்நிலையில் செல்வி தன்னுடன் வேலை செய்து வரும் ஒருவரை காதலித்து உள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. காதலன் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் செல்வியின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அத்துடன் ராமய்யா தனது மகளை கண்டித்து உள்ளார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி மாரியம்மாள் தனது மூத்த மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். ராமய்யாவும் வெளியே சென்றார். வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது குடிபோதையில் அங்கு வந்த ராமய்யா, தனது மகள் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார். அத்துடன் அவர் யாரிடம் பேசுகிறார் என்பதை மறைந்து இருந்து கேட்டார். அப்போது, செல்வி தனது காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பது ராமய்யாவுக்கு தெரியவந்தது.
இதனால் கோபம் அடைந்த அவர் தனது மகளிடம் சென்று, நான் சொன்ன பிறகும் நீ காதலனுடன் பேசுகிறாயா என்று அவரை அடித்ததுடன் வீட்டுக்குள் இழுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. நீங்கள் என்னை அடித்தாலும், நான் எனது காதலனைதான் திருமணம் செய்வேன் என்று செல்வி கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமய்யா, தனது மகள் என்றும் பாராமல் செல்வியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.இதனால் கதறி துடித்த செல்வி, தனது தாய் வீட்டுக்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தல் பிரிவில் ராமய்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.செல்விக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காதலித்ததற்காக மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி