செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!…

கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!…

கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!… post thumbnail image
இன்ச்சான்:-தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் கபடி பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.கடந்த 2010 குவாங்சு, ஆசிய விளையாட்டு பைனலில், இந்திய அணியிடம் 37–20 என, ஈரான் தோற்றிருந்தது. இதனால், இம்முறை ஈரான் வீரர்கள் கடும் சவால் கொடுக்கத் துவங்கினர்.மாறாக, இந்திய அணியினர் துவக்கத்தில் இருந்தே தவறு செய்ய, போட்டியின் 9 வது நிமிடத்தில் இந்திய அணி 7–13 என, பின்தங்கியது.தொடர்ந்து மீண்டும் சொதப்ப, முதல் பாதி முடிவில் இந்திய அணி 13–21 என்ற கணக்கில், பின் தங்கி இருந்தது.

இரண்டாவது பாதி துவங்கியதும், இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொண்டனர். அடுத்தடுத்து புள்ளிகள் பெற, ஸ்கோர் 21–21 என, சமனிலையை அடைந்தது.தொடர்ந்து மிரட்டிய இந்திய அணி, போட்டியின் 17வது நிமிடத்தில் 25–24 என, முன்னிலை பெறத்துவங்கியது. கடைசி நிமிடத்தில் ஈரான் வீரரை மடக்க, 27–25 என்ற புள்ளிக்கணக்கில்இந்திய அணி ‘திரில்’ வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
கடந்த 1990, பீஜிங் ஆசிய விளையாட்டில் கபடி அறிமுகம் ஆனது. அன்று முதல் 1994 (ஹிரோஷிமா), 1998 (பாங்காக்), 2002 (புசான்), 2006 (தோகா), 2010 (குவாங்சு) என, தொடர்ந்து ஆறு முறை இந்திய அணி தங்கம் வென்றிருந்தது.நேற்று மீண்டும் வென்று, ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஏழாவது முறையாக, தங்கம் வென்று அசத்தியது.

பெண்கள் கபடி பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. வழக்கம் போல இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். இதனால், முதல் பாதி முடிவில் 16–10 என, இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் ஜொலித்தனர். முடிவில், இந்திய பெண்கள் அணி 31–21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. கடந்த 2010 ஆசிய விளையாட்டினை தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்திய பெண்கள் கபடி அணி, தங்கம் வென்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி