‘பாபா’ படத்தின் நஷ்டத்தை ரஜினிகாந்த் சரிக்கட்டியது போன்று தெலுங்கில் தற்போது மகேஷ்பாபு ரஜினியின் வழியைப் பின்பற்றி வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத் தொகையைக் கொடுத்து சரிக்கட்டியிருக்கிறார். மகேஷ்பாபு, தமன்னா மற்றும் பலர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஆகடு’ திரைப்படம் படுதோல்வியடைந்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பெரிதும் நஷ்டப்பட்டனர். அதையடுத்து அவர்கள் இனி வரும் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
வினியோகஸ்தர்களின் நஷ்டம் பற்றி அறிந்த மகேஷ் பாபு அவர்களை அழைத்து, தன்னுடைய சம்பளத்திலிருந்து பெரும் தொகையை அளித்தார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆகாடு’ படத்திற்காக மகேஷ் பாபு சுமார் 20 கோடி வரை சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அதில் அவர் எவ்வளவு தொகையை அவர்களுக்குத் தந்தார் என்பது ரகசியமாகவே உள்ளது.
மகேஷ் பாபுவின் இந்த செயலை வினியோகஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்களாம். ஆனால், மற்ற ஹீரோக்கள் இது வேண்டாத வேலை என்று குமுறுவதாகவும் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி