அதையடுத்து, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷாலுடன் சுசீந்திரன் இயக்கும் படத்தில் லட்சுமிமேனன் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக படு பிசியாக இருந்து வந்த லட்சுமிமேனன், இப்போது ப்ரியாகி விட்டார்.
அதனால் மீண்டும் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருக்கிறாராம். படிப்பு ஒருபக்கம் இருந்தாலும், தான் தோழிகளுடன் விளையாட வேண்டிய காலகட்டத்தை சினிமாவில் செலவழித்து விட்டதால், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் பள்ளி க்ரவுண்டில் ஹாயாக விளையாடி என்சாய் பண்ணி வருகிறாராம் லட்சுமிமேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி