பின்னர் செய்தியாளர்களிடடையே பேசிய சரிதா, இந்திய அதிகாரிகளை சரமாரியாக குற்றம்சாட்டியதுடன் தன் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
அவர் இவ்வாறு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த சிறிது நேரத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அவரது நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.சரிதா மீது ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆசிய போட்டிகள் முடிந்ததும் முடிவு அறிவிக்கப்படும். இதுதொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்க மேற்பார்வையாளர் மற்றும் தொழில்நுட்ப பிரதிநிதி டேவிட் பிரான்சிஸ் தனது அறிக்கையை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க சரிதா மற்றும் அவரது குழுவினரால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும், போட்டியில் என்ன நடந்திருந்தாலும் பதக்கத்தை வாங்க மறுத்திருப்பது வருத்தம் அளிக்கும் செயல் என்றும் பிரான்சிஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அறிக்கை வந்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனாவல் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி