சென்னை:-தமிழக முதல்வர் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ் திரையுலகத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.இதை விமர்சிக்கும் விதமாக தயாநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா?வரி விதிப்பு மற்றும் ‘தலைவா’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.
தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் இங்கு அனைவருக்கும் இருக்கிறது.’ என்று கிண்டலாகவும், கடுமையாகவும் டுவிட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி