இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகவே அஜித், விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெறவில்லை என்று திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் சொன்னாலும் அவர்களுடைய ரசிகர்களைப் பொறுத்தவரை அவை வெற்றிப் படங்கள்தான்.
அப்படியிருக்க தமன்னாவுக்கும், காஜல் அகர்வாலுக்கும் அடுத்து தமிழில் வேறு எந்தப் படங்களுமே ஒப்பந்தம் ஆகாததுதான் ஆச்சரியம். ஒரு மொழியில் முன்னணி ஹீரோயின்கள் என்றால் குறைந்தது வருடத்திற்கு மூன்று படங்களாவது நடித்தால்தான் நன்றாக இருக்கும்.
ஆனால், அவர்களிருவரைப் பொறுத்தவரையில் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க யாருமே அழைக்கவில்லை. காஜல் அகர்வால், தனுஷ் ஜோடியாக பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள், அந்தப் படம் ஆரம்பமாகுமா என்பது இதுவரை தெரியவில்லை. தமன்னாவை தமிழ் இயக்குனர்கள் சுத்தமாக மறந்தே போய்விட்டார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி