சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அவர் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்த முடித்துவிட்டு அங்கிருந்து புல்தரையில் போய் உட்கார்ந்தார். அங்கு ஏராளமான எறும்புகள் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான எறும்புகள் அவரது உடலில் ஏறி மளமளவென அனைத்தும் அவரை கடிக்க துவங்கின.
வலியால் துடித்தார். அவசரம் அவசரமாக மேக்கப் ரூமுக்குள் ஓடிப்போய் உடம்பில் அப்பி இருந்த எறும்புகளை கீழே தட்டிவிட்டார். எறும்புகள் கடித்ததில் உடல் முழுவதும் சிவப்பாக மாறி இருந்தது. எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் அலர்ஜிக்கான கிரீம் வாங்கி வந்து உடம்பில் தடவி ஓய்வு எடுத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி