இந்த நோயினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின் முடிவுகளே இவை என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகளிலும் லைபீரியாவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பெற்றோர்கள் இறந்ததினால் புறக்கணிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது. இக்குழந்தைகளின் உறவினர்கள் தங்களின் பெற்றோர்கள் இறந்துபோன மருத்துவமனைகளிலேயே அனாதைகளாகக் காணப்படுகின்றனர். அல்லது சிலசமயம் உறவினர்களால் உணவு அளிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடும் இந்த அமைப்பு இதுதவிர மற்ற எந்தத் தொடர்பையும் இந்தக் குழந்தைகளுடன் மற்றவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை என்று தெரிவித்துள்ளது.
மூன்று, நான்கு வயதுடைய குழந்தைகள் கூட இவ்வாறு காணப்படுவதாக யுனிசெப் கூறுகின்றது. சியரா லியோனில் அடுத்த மாதம் இதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்ட ஐ.நா. அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குமுன்னர் இத்தகைய குழந்தைகளுக்குத் தகுதியான பாதுகாப்பாளர்கள் கிடைக்கவேண்டும் என்று யுனிசெப் எதிர்பார்க்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி