செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பதக்க பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியது!…

பதக்க பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியது!…

பதக்க பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியது!… post thumbnail image
இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சிறந்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா, இந்த ஆண்டு சாகத் மைனேனியுடன் இணைந்து சீன தைபே ஜோடியான செயின் யின் பெங்-ஹாவோ சின் சான் ஜோடியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் துவக்கத்தில் சானியா ஜோடி சற்றே பின்தங்கியது. 3-4 என்ற நிலையில் இருந்தபோது, எதிர்ஜோடியை பிரேக் செய்த சானியா-மைனேனி, அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினர். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சானியா-மைனேனி ஜோடி, அந்த செட்டை 6-3 என எளிதில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.இது இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கப் பதக்கம் ஆகும். இதன்மூலம் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி