சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியவர் செளந்தர்யா அஸ்வின். ரஜினியின் இளைய மகளான இவர், தற்போது கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பிறகு விஜய்யின் கத்தி படத்துக்கு கைகொடுத்தார். அந்த படத்தின் ஆடியோவை எல்லா நிறுவனங்களும் வாங்கத்தயங்கி நின்றபோது, செளந்தர்யா அஸ்வின்தான் தைரியமாக கத்தி ஆடியோ உரிமையை வாங்கினார்.
அதுவரை திக்கித்திணறிப்போய் நின்ற கத்தி படக்குழு அதன்பிறகுதான் அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியது. அதோடு, கத்திக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்கின.இந்நிலையில், திருப்பதி பிரதர்ஸிடமிருந்து உத்தமவில்லனை வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். அது மட்டுமின்றி, அதே நிறுவனம் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கயிருக்கும் ரஜினி முருகன் படத்தை வெளியிடும் உரிமையையும் இப்போதே வாங்கி விட்டாராம். திருப்பதி பிரதர்சுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து காப்பாற்றியிருக்கிறார் செளந்தர்யா அஸ்வின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி