ஜெயலலிதாவை அவரது தனி மருத்துவர் டாக்டர் சாந்தாராம் சந்திக்க நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதாவை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சசிகலாவின் உறவினர் கொண்டு வந்த காலை உணவு அனுமதிக்கப்பட்டது. இட்லி, பொங்கலை ஜெயலலிதா சாப்பிட்டார்.தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கும் நிகழ்ச்சியை ஜெயலலிதா பார்ப்பதற்கு ஜெயிலில் அதிகாரிகள் டெலிவிஷன் வசதி செய்து கொடுத்தனர்.கடந்த 2 தினங்களாக காலை 5.30 மணிக்கு எழுந்து கொள்ளும் ஜெயலலிதா வி.ஐ.பி.க்களுக்கான பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தன்னை பரிசோதிக்க வரும் டாக்டர், சிறை அதிகாரிகளிடம் கன்னடத்தில் சரளமாக பேசுகிறார். சில நேரங்களில் சசிகலா, இளவரசிக்கு தேவையான வசதிகளையும் சிறை அதிகாரிகளிடம் கன்னடத்தில் பேசி செய்து தருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க தினமும் காலையில் 3 தமிழ் நாளிதழ், 2 ஆங்கில செய்திதாள்கள் வழங்கப்படுகின்றன.தன்னை யார் பார்க்க வரவேண்டும் என்று அவர் அனுமதி அளிக்கிறாரோ அவர்கள் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதற்கிடையே சிறையில் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சுகன்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.சுகன்தீப் ஏற்கனவே எடியூரப்பா, ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து உள்ளார். சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படாததால் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி