இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் பெமி ஒகுநோடே புதிய சாதனை புரிந்தார்.அவர் 9.93 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது புதிய ஆசிய சாதனையாகும். 9.93 வினாடியில் கடந்ததன் மூலம் 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பெமி ஒகுநோடே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
சீன வீரர் சூ பிங்டெய்ன் 10.10 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜப்பான் வீரர் தகாஷே 10.15 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி