சென்னை:-கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் இப்போதைக்கு கால்சீட் கிடைக்காத நிலை. அதனால் வாலு, இது நம்ம ஆளு படங்களை முடித்து விட்ட சிம்புவை தனது புதிய படத்தில் நடிக்க பேசியுள்ளாராம் கிருத்திகா.
கதையை கேட்ட சிம்புவும் நடிக்க சம்மதம் சொல்லி விட்டாராம். மேலும், எனது திறமையை வெளிப்படுத்த சரியான கதைக்களங்கள் கிடைக்கவில்லை என்று தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களிடம் புலம்பி வரும் சிம்புவுக்கு இந்த படத்தில் 4 கெட்டப்புகளில் நடிக்கும் வேடமாம். அதனால் இந்த கதை எனது நடிப்பு பசிக்கு நல்ல தீனியாக அமையும் என்று கூறியுள்ளாராம் சிம்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி