சென்னை:-நடிகை அஞ்சலிக்கு ஆந்திராவிலுள்ள ஒரு தொழிலதிபருடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருககிறது. ஆனால், இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன அஞ்சலி, அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் சினிமாவில் படத்துக்குப்படம் காதலிப்பதோடு சரி. மற்றபடி யார் மீதும் எனக்கு காதல் இல்லை.
அமெரிக்காவிலும் காதலர் இல்லை, ஆந்திராவிலும் காதலர் இல்லை. யாரோ தேவையில்லாமல் என்னைப்பற்றி இப்பயெல்லாம் வதந்தி பரப்பி விட்டு எனனை டென்சன் செய்து வருகிறார்கள் என்கிறார். மேலும், எனக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. இன்றைக்கு 30 வயதுக்கு மேலும் தென்னிந்திய நடிகைகள் ஹீரோயினாக நடிக்கிற நிலைமை உருவாகியிருக்கிறது. அதனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு நான் சினிமாவில் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி