சில வருடங்களுக்கு முன் அஜித் நடித்த ‘ஜி’ என்ற படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். தாமதமான வெளியீட்டால் அந்தப் படம் அப்போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் முன்னணி நிறுவனமாகவும் உள்ளதால் அஜித்தை வைத்து படம் தயாரிக்க அவரை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கடுத்து அவர் நடிக்கும் படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை.
அஜித் தற்போது படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களின் அடுத்த படம் எது என்று செய்திகள் வெளிவந்தாலும் அஜித்தைப் பற்றிய தேவையற்ற செய்திகள் எப்போதுமே வெளிவராது. அதனால் அஜித்தாகவே அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் வரையில் லிங்குசாமி தயாரிப்பில் அஜித் நடிக்கவிருப்பது செய்தியாக மட்டுமே வலம் வர வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி