செய்திகள்,திரையுலகம் ரஜினியுடன் நடிக்க விரும்பும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

ரஜினியுடன் நடிக்க விரும்பும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

ரஜினியுடன் நடிக்க விரும்பும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!… post thumbnail image
சென்னை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் தயாராகியுள்ள படம் பேங் பேங். இப்படம் இந்தி மட்டுமின்றி தமிழ்., தெலுங்கிலும் வெளியாகிறது. சித்தார்த் ராய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் கத்ரினா கைப் நாயகியாக நடித்திருக்கிறார். அக்டோபர் 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இப்படத்துக்காக 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சியில் 10 நாட்களாக தொடர்ந்து நடித்தாராம் ஹிருத்திக். அதன்காரணமாக, அவரது தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். அதையடுத்து அவர் டி.வி பார்ப்பதற்கு 3 மாதம் தடை விதித்த மருத்துவர்கள் யாரிடமும் பேசக்கூடாது என்றும் கண்டிசன் போட்டார்களாம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள ஹிருத்திக் ரோஷன், இந்த பேங் பேங் படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகராக சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். அதோடு தனக்கு பிடித்தமான மைக்கேல் ஜாக்சன் பாணியிலும் பாடல் காட்சிகளில் நடனமாடியிருப்பதாகவும் கூறியுள்ள ஹிருத்திக் ரோஷன், நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன். அவரது ஸ்டைலான நடிப்பு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் அவருடன் ஒரு இந்தி படத்தில் நடித்த எனக்கு மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது என்றும் கூறியுளளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி