செய்திகள்,திரையுலகம் சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!…

சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!…

சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!… post thumbnail image
சென்னை:-இந்தி இயக்குனர் பைசல் சைஃப் இயக்கி உள்ள படம் மெயின் கோன் ரஜினிகாந்த். இதில் ஆதித்யாமேனன், கவிதா ராதேஷ்யாம் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் என் பெயரில் வெளிவரும் இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் படத்துக்கு தடைவிதித்தது. மேலும் படத்தை ரஜினிக்கு போட்டுக்காட்டவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மெயின் கோன் ரஜினிகாந்த் படத்தை ரஜினியும் அவரது மகள் சௌந்தர்யாவும் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மினி தியேட்டரில் பார்க்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை படத்தின் இயக்குனர் பைசல் சைஃப் செய்துள்ளார்.இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினி சாரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சீன்கூட படத்தில் கிடையாது. அதற்காக அவருக்கு படத்தை போட்டு காட்டுகிறேன். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். படம் பார்த்த பிறகு இதனை ரஜினிசார் உணர்வார் என்று நம்புகிறேன் என்கிறார் பைசல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி