இன்சியான்:-ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியா– தென்கொரியா அணிகள் மோதின.இதன் ஒற்றையர் ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா கொரியா வீராங்கனை பார்க்கை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் 11–4, 11–5, 8–11, 11–5 என்ற கணக்கில் சூன்மியை வீழ்த்தினார்.
இதனால் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதி ஆகிவிட்டது. இந்திய ஆண்கள் அணி இன்று நடக்கும் அரை இறுதியில் குவைத் அணியுடன் மோதுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி