செய்திகள்,திரையுலகம் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!… post thumbnail image
சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சிவகுமாரின் வாரிசு என்ற பின்னணியுடன் பீல்டுக்கு வந்த பருத்தி வீரன் கார்த்தி இவர்கள் இருவரையும் பற்றி ஒரு வியப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

நானெல்லாம் திடீர்னு சினிமாவுக்குள் வந்தவன். சிவகுமார் மகன் என்ற விசிட்டிங் கார்டு இருந்தாலும், எனக்கான கதைகளை நானே தேர்நதெடுத்துதான் நடித்து வருகிறேன். ஆனாலும் சில சமயங்களில் படங்கள் சறுக்கி விடுவதையும் தவிர்க்க முடியவில்லை.ஆனால், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் தேர்வு செய்யும் கதைகளே வித்தியாசமாக உள்ளது.

முன்னணி ஹீரோக்களைப்பார்த்து சொல்வது போன்று, இந்த மாதிரி கதைகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று மேற்கோள் காட்டுகிற அளவுக்கு இரண்டு பேருமே குறுகிய காலத்தில் வளர்ந்து விட்டார்கள் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.அதேசமயம், இப்படி வளர்ந்து விட்டபோதும், மார்க்கெட்டை இதேபோன்று சீராக வைத்திருக்க அவர்கள் நிறைய போராட வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி