செய்திகள்,திரையுலகம் நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…

நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…

நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!… post thumbnail image
சென்னை:-‘கல்லூரி’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியான நடிகை தமன்னா அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் திடீரென அவரைத் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. தற்போது அதே போன்றதொரு சதிவலையை தெலுங்குத் திரையுலகிலும் பின்னியிருக்கிறார்களாம்.

தமன்னா மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த ‘ஆகடு’ படம் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவருடைய ராசி என்று பரப்பியவர்கள் தற்போது, அந்தப் படத்தில் தமன்னா நடித்த காட்சிகள் சிலவற்றை குறைத்துவிட்டதால்தான் படத்தின் பிரமோஷனுக்கு தமன்னா வேண்டுமென்றே வரவில்லை என்று கூறி மகேஷ்பாபுவின் ரசிகர்களை உசுப்பி விடுகிறார்களாம்.

மகேஷ் பாபுவே அவருடைய படத்தின் பிரமோஷனுக்கு வராத நிலையில் தமன்னாவை வேண்டுமென்றே குற்றம் சுமத்துகிறார்கள். அவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் தான் ‘ஆகடு’ படத்தின் பிரமோஷனுக்கு அவர் வரவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி