செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?… post thumbnail image
சென்னை:-பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தைப் பற்றி தினம் தினம் ஏதாவது புதுப் புது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டதில் தற்போது மாற்றம் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர்கள் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று சொல்லிவிட்ட நிலையில் சிலர் வேண்டுமென்றே படம் தீபாவளிக்கு வராது என்ற தகவலைப் பரப்பி வருகிறார்களாம்.

தீபாவளிக்கு ‘ஐ’ படத்துடன் போட்டி போடும் படங்கள் சம்பந்தப்பட்டவர்கள்தான் அந்தத் தகவலை பரப்புவதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவல் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்ட ஆந்திரத் திரையுலகையும் சென்றடைந்திருப்பதுதான் அதிர்ச்சியான ஒன்று. பொதுவாகவே இது மாதிரி விசேஷ நாட்களில் எந்தப் படம் வெளிவரும் என்பது வெளியீட்டிற்கு சில வாரங்கள் முன்னதாகத்தான் உறுதியாகத் தெரிய வரும்.

கடைசி நேரத்தில் சில மாறுதல்கள் எந்தப் படத்திற்கும் வரலாம். ஏன் இந்தத் தகவலைப் பரப்பி வருபவர்களின் படங்களுக்குக் கூட வரலாம். ரஜினிகாந்த் படம் வெளியானால் மற்ற படங்களை ரிலீஸ் செய்பவர்கள் எப்படி பயப்படுவார்களோ, அப்படித்தான் தற்போது ‘ஐ’ படத்தைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி