கடந்த சில மாதங்களாகவே இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டு வந்தது. கடந்த வாரம் ‘ஐ’ இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். அதன் பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் ‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரான லீ விடேகர் தலைமையில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டை ஹார்ட், ஃபாஸ்ட் பைவ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தவர்தான் லீ விடேகர். அதனால் ‘லிங்கா’ படத்தின் சண்டைக் காட்சிகள் ரஜினிகாந்த் ஸ்டைலுடன் இன்னும் பலமாக இருக்கும்படி படமாக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி