செய்திகள்,திரையுலகம் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் கட் அவுட்டை திருமணம் செய்த பெண்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் கட் அவுட்டை திருமணம் செய்த பெண்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் கட் அவுட்டை திருமணம் செய்த பெண்!… post thumbnail image
லாஸ்ஏஞ்சல்ஸ்:-ஹாலிவுட்டில் பிரபல நடிகர் ராபர்ட் பாண்டிசன். இவர் நடித்த ரத்தக்காட்டேரி படம் பிரபலமானதாகும். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாசை சேர்ந்த லாரன் ஆர்ட்கின்ஸ் என்ற பெண் அவரது தீவிர ரசிகராக இருந்து வந்தார். ராபர்ட் பாண்டிசனை திருமணம் செய்ய விரும்பினார்.

அது நடக்க கூடிய காரியமல்ல என்பதை தெரிந்து கொண்ட லாரன் ஆர்ட்கின்ஸ் நடிகர் ராபர்ட் பாண்டிசன் கட்அவுட்டை திருமணம் செய்துள்ளார். இதற்காக ராபர்ட் பாண்டிசனின் படத்தை பல்வேறு விதமான கட்அவுட்டுகளாக தயாரித்து. அதில் ராபர்ட் பாண்டிசன் திருமண உடையில் இருப்பது போன்ற ஆளுயர கட்–அவுட் அருகே நின்று லாரன் ஆர்ட்கின்ஸ் திருமணம் செய்து கொண்டார்.மேலும் ராபர்ட் பாண்டிசன் பல்வேறு அலங்கரத்தில் இருக்கும் கட்அவுட்டுகளுடன் நின்று திருமண படமும் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது எத்தனையோ மாப்பிளைகள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை. ராபர்ட் பாண்டிசனை தான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். அவரது கட்அவுட்டை திருமணம் செய்திருப்பதன் மூலம் எனது ஆசையை நிறைவேற்றி இருக்கிறேன். நான் நினைத்ததை சாதித்து விட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி