சென்னை:-தமிழில் முன்னணி நடிகையாக தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, அவருடைய அறிமுகத் திரைப்படத்தில் நடிப்பதற்காக 9 மாதங்கள் காத்திருந்தாராம். 2004ம் ஆண்டிலேயே நாகார்ஜுனா நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டாராம். தோழிகள் ஊக்கம் கொடுத்ததால்தான் அதில் கலந்து கொள்ளவும் சம்மதித்துள்ளார்.
அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர் முதன் முதலாக காமிரா முன் நின்று நடித்தது 2005ம் ஆண்டில்தானாம். வாய்ப்பு கிடைத்ததற்கும் காமிரா முன் நின்று நடித்ததற்கும் அவருக்கு 9 மாதங்களுக்கு மேல் ஆனதாம்.அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் உதவி இயக்குனராக வேலை பார்த்திருப்பார் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டார்களாம்.
ஆனாலும், அவருடைய தோழிகள்தான் அனுஷ்கா முதல் காட்சியில் எப்படி நடிக்கப் போகிறாரோ என்று மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம். முதல் காட்சியில் நடித்த பின் தனக்கிருந்த பயம் அனைத்தும் போய்விட்டது என்கிறார் அனுஷ்கா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி