பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் (2 ரன்), காலிஸ் (6 ரன்), உத்தப்பா (23 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், மிடில் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ், கைகொடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய அவர் கொல்கத்தா அணியை 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு இலக்கை எட்ட வைத்தார். சூர்யகுமார் யாதவ் 43 ரன்களுடன் (19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் நின்றார்.
3-வது வெற்றியை புசித்த கொல்கத்தா அணி இதன் மூலம் முதல் அணியாக அரைஇறுதியையும் எட்டியது. மொத்தத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் கொல்கத்தா தொடர்ச்சியாக பதிவு செய்த 12-வது வெற்றி இதுவாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி