சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக விஜய் தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விஜய் பாடியுள்ள ‘செல்பிபுள்ள’ பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை. இப்பாடலை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால், நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் மும்பையிலேயே படமாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி