செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…

‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…

‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர். இசை விழாவில் படத்தின் நாயகன் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். படத்தில் வில்லன்களாக நடித்துள்ள மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அந்த விழாவிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.இதனிடையே அந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன். அம்மாதிரியான பெரும் தொகை செலவு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.

ஆனால், ‘ஐ’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன், எனவும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பில் சுரேஷ் கோபி, ராம்குமார் உள்ளிட்டோர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவர்களை விழாவிற்கு அழைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி