மிக முக்கியமான இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார். அந்த விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது.
அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று காலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தானாகவே அந்த சுற்றுப்பாதையில் விண்கலம் இறங்கும் வகையில் கட்டளைகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி