இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் வழிகாட்டுனராகவும் லாரா தத்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த போட்டியில் நான், பிரியங்கா சோப்ரா, தியா மிர்சா வெற்றி பெற்றோம். அப்போதிருந்த வழிமுறைகள் வேறு, இப்போதுள்ள வழி முறைகள் வேறு. நான் இந்த போட்டிக்கு அழகிகளை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். மிஸ் யுனிவர்சாக விரும்பும் பெண்கள் இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பார்கள். நான் அவர்களுக்கு என்ன செய்தேன் என்பதை கற்றுக் கொடுக்க போகிறேன்.
15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களை மிஸ் யுனிவர்சுக்கு தயார்படுத்துவது என் வேலை. இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுறவருக்கும் மேலும் பயிற்சியும் வழிகாட்டுதலும் தர இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் மற்ற பெண்களும் அதன் மூலம் பாடம் படித்துக் கொள்ள முடியும் என்கிறார் லாராதத்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி