செய்திகள்,திரையுலகம் ரகசிய தீவு (2014) திரை விமர்சனம்…

ரகசிய தீவு (2014) திரை விமர்சனம்…

ரகசிய தீவு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
விமான பயிற்சி அளிப்பதற்காக டேவிட் மற்றும் அவரது சகோதரர் கார்னல் ஆகியோரை அவர்களின் தந்தை ஒரு சிறிய ரக விமானத்தில் அழைத்துச் செல்கிறார். வழியில் விமானம் புயலில் சிக்கி கடலில் விழுந்து விடுகிறது. இதிலிருந்து டேவிட் மற்றும் கார்னல் உயிர் பிழைக்கிறார்கள். இவர்களின் தந்தை விமானத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் நீரினுள் மூழ்கி விடுகிறார். தப்பித்த இருவர்களும் ஆள் நடமாட்டமே இல்லாத தீவுக்குள் செல்கிறார்கள். அங்கு ஆராய்ச்சியாளரான ஒருவரை சந்திக்கிறார்கள். அவரிடம் தங்கள் நகரத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் ரகசிய தீவுக்கு சென்றால் தான் அங்கிருந்து நகரத்திற்கு செல்ல வழி கிடைக்கும் என்று சொல்லி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

செல்லும் வழியில் அந்த தீவின் மன்னர் மகளான நாயகி கேட்டிகாரை சந்திக்கிறார்கள். அந்த தீவில் டைனசர்கள் மனிதர்களுடன் சகஜமாக பழகி வருகிறது. கேட்டிகாரின் மூலம் வாட்டர் சிட்டிக்கு மன்னரை சந்திக்க செல்கிறார்கள் டேவிட் மற்றும் கார்னல். இவர்கள் டைனசர்கள் மூலம் பயணம் செய்கிறார்கள். அப்போது செல்லும் வழியில் கொடூர டைனசர்களிடம் மாட்டிக்கொண்டு பிறகு அங்கிருந்து தப்பித்து வாட்டர் சிட்டிக்கு சென்று மன்னரை சந்திக்கிறார்கள். மன்னர், டேவிட் மற்றும் கார்னலுக்கு சிறந்த வரவேற்பை கொடுத்து அவர்களை இந்த தீவில் தங்கும்படி அறிவித்து குடியுரிமை கொடுக்கிறார். இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், மன்னரோ நீங்கள் இங்குதான் இருந்தாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளாமல் அந்த தீவில் தங்குகிறார்கள். பிறகு அங்குள்ள மக்களின் பழக்கங்களுடன், டைனசர்களோடு சேர்ந்துக் கொண்டு பழகுகிறார் டேவிட். ஆனால் கார்னல் எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது.இறுதியில் இருவரும் சமாதானம் ஆகி அந்த தீவில் இருந்து வெளியேறினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் டேவிட் மற்றும் கார்னல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகி கேட்டிகார் அழகு தேவதையாக வலம் வருகிறார். படத்தில் வினோதமான டைனசர்களும், ராட்சத பறவைகளும் பேசுவது அழகு. இவர்களின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் கூடுதல் பலம். குறிப்பாக வாட்டர் சிட்டி ஊரை கிராபிக்சில் சிறப்பாக உருவாக்கிருக்கிறார்கள். ராட்சத பறவைகள் மீது மனிதர்கள் பயணம் செய்யும் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ரகசிய தீவு’ பயங்கர தீவு………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி