சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது வடஇந்தியாவில் சிக்கிம், ஜோத்பூர், சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பிய படக்குழு, 10 நாட்கள் இடைவெளிக்குப்பிறகு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது.
படம் ஆரம்பிக்கும்போது தன்னுடைய தலைமுடியை சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் வைத்து நடித்த அஜீத், அதன்பிறகான காட்சிகளில் கறுப்பு நிற தலைமுடியுடன் நடித்தார். இந்நிலையில், சென்னையில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் மீண்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடிக்கப் போகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி