மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதற்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராம்நாராயண் தெரிவித்தார்.சசிகபூர் இந்திய சினிமாவின் முன்னோடியான பிரிதிவிராஜ் கபூரின் மகனும் ராஜ்கபூரின் சகோதரரும் ஆவார்.
இந்தி மொழியில் 160 படங்களில் நடித்துள்ளார். இதில் ஆவாரா, தீவார், சத்யம் சிவம் சுந்தரம், கபி.கபி, ஆகியவை சசிகபூர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காவியம் ஆகும். சசிகபூரின் மனைவி ஜெனீபர் ஏற்கனவே இறந்து விட்டார். குணால் கபூர், கரன்கபூர் என்ற மகன்களும், சந்தனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் குணால் கபூரும் நடிகர் ஆவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி