இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சர்வதேச அளவில் 2 ஆயிரம் இடங்களில் நேற்று பேரணி நடந்தது. அமெரிக்காவின் மேன்காட்டன் நகரில் நடந்த பேரணியில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் பங்கேற்றார்.இங்கு 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொண்டனர். நியூயார்க்கில் நடந்த பேரணியில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் பருவநிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கொம்பு வாத்தியங்கள் மற்றும் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக் கருவிகளை வாசித்தனர். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி