சென்னை:-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர். மேலும் ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவை செய்யவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தின் பூஜை சிறியளவில் சென்னையில் நடைபெறவுள்ளது. அதன்பின் முதல் கட்டமாக கேரளாவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி