சமந்தா ஏற்கெனவே அழகாகத்தான் இருக்கிறார். ஆனாலும், அவருடைய மூக்கு அமைப்பைப் பற்றி அவருக்கு திருப்தி இல்லையாம். அதனால், அதைக் கொஞ்சம் சரி செய்து அழகாக்கிக் கொள்ள லண்டனுக்குச் சென்று ஆபரேஷன் செய்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்று தெரியவில்லை.
மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பின்தான் நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் என்ற ராசியை யாராவது சமந்தாவிற்கு சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை.இது பற்றி எப்படியும் சமந்தாவே இன்னும் சில நாட்களில் பதிலளித்து விடுவார். அதுவரை இந்த வதந்தி ஊர்வலம் வந்து கொண்டுதானிருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி