இவர்களுடன் நடிகை சுருதிஹாசனும் சேர்ந்துள்ளார். வெள்ள நிவாரண நிதியாக பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார். மாணவர்களும் சமூக இயக்கங்களும் இதில் பங்கெடுத்து நிதிஉதவிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.சுருதிஹாசன் பிசியான நடிகையாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். அழகும் புத்திசாலித்தனமும் சுருதிஹாசனிடம் நிறைய இருக்கிறது என்று திரையுலகத்தினர் புகழ்கிறார்கள்.
இது குறித்து சுருதிஹாசன் கூறும் போது, அழகு மட்டும் இருந்தால் போதாது அறிவும் வேண்டும். அறிவு இல்லாத அழகு பயனற்றது. அழகால் மற்றவர்களை கவரலாம். ஆனால் வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு புத்திசாலித்தனம் வேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி