அடுத்த 2100-ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என்று தெரிவித்துள்ளனர். முந்தைய மதிப்பீடுகள் படி மக்கள் தொகை வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகள் குறைவாக இருக்கும் என்றும், அடுத்த நூற்றாண்டு தொடக்கத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி 9 பில்லியன் ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது உலக மக்கள் தொகை 7 பில்லியனாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை வளர்ச்சி பற்றி சரியாக கூறமுடியாது ஏனெனில் உலகின் தற்கால நிகழ்வுகளை பார்க்கும் போது 70 சதவீதம் பல்வேறு நாடுகளில் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது குறிப்பாக தீவிரவாதம், இயற்கை பேரழிவுகள் போன்றவை முக்கிய பிரச்சனையாக உள்ளது.
தற்போது விரிவடைந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப முக்கிய பிரச்சனையாக இருக்கும் உணவு மற்றும் உலகை அச்சுறுத்தும் சுகாதாரம் ஆகியவை பெரும் அழுத்தத்தை கொடுக்கிறது.
உலக மக்கள் தொகை வளர்ச்சியில் ஆப்பிரிக்கா நாடு பெரும் மக்கள் தொகை வளர்ச்சி நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்பிரிக்கா நாடுகளில் 2100-க்குள் 5 பில்லியன் மக்கள் வரை உயரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்படுத்துவது இரண்டு விஷயங்கள் ஒன்று கருத்தடையை பயன்படுத்துவது மற்றொன்று பெண்கள் கல்வி வளர்ச்சி அதிகப்படுத்துவது போன்றவை ஆகும். இது மக்கள் தொகையை சமாளிக்க காரணிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி